Pages

Friday, September 29, 2017

சண்முகபிரியன்: உனக்காவது என்னை பிடித்திருக்கிறதே !

சண்முகபிரியன்: உனக்காவது என்னை பிடித்திருக்கிறதே !

உனக்காவது என்னை பிடித்திருக்கிறதே !

உறவுகளை விட
நெருப்பிற்கு அதிகம்
பிடித்துவிட்டதோ
அணைவதற்கு பதில்
அணைத்துக் கொள்(ல்)கிறதே!
உனக்குள்
அக்னி பிரவேசம் செய்து
மீண்டெழ மாட்டேன்
உனக்குள்ளே ஐக்கியமாகி
ஜோதியாகி விடுகிறேன்

Monday, September 4, 2017

தண்ணீரை கண்டுபிடி

மனிதன் ஆசைகள் நூறு,
                ஆயிரம் கொண்டான்.
கனவுகள் பலப்பல -தினம்,
                 தினம் கண்டான்.

இவர்களை நினைத்து,
                  இறைவனும் சிரித்தான்.
இழிபிறவி செருக்கினை,
                  அடக்கிட நினைத்தான்.

மானுடத்தேவை மழைதனில்,
                                 - வைத்தான்.
மழையின் சூட்சமம் மரத்தினில்,
                                  -வைத்தான்.

தவங்களும்,யாகங்களும்,
                       மழைதனை தந்திடுமா?
வெட்டிய மரங்களின் -பாவங்கள்,
                        மனிதனை விட்டிடுமா?

மரங்களின் கருணையினை,
                      மனிதனும் இழந்துவிட்டான்.
மழைதரும் பொழுதினையே - அந்த,
                      வருணனும் மறந்து விட்டான்.

இயற்கையின் அழிவினையே-இறைவனும்
                             புரிந்து கொண்டான்.
இந்த பாவிகள் உலகத்திற்கு-  அவன்,
                             பஞ்சத்தை பரிசளித்தான்.

இனிவரும் வருஷங்களில் -பூமியின்,
                               உதிரமது காய்ந்திருக்கும்.
நாளை நிறங்களின் பட்டியலில்- பச்சை,
                              தொலைந்தே போயிருக்கும்.

உறிஞசியது போதுமடா - சில,
                       சொட்டுக்கள் விட்டு வைப்போம்.
இல்லை பசுமையை நாம் பார்க்க,
                        பயணங்கள் சென்றிடுவோம்.

காண்ணாடி குடுவைக்குள்ளே,
                        காத்து நாம் வைத்திடுவோம்.
தண்ணீர்  துளியொன்றை,
                                  -  காட்சிப்பொருளாக ,
தன்நாவறியா தண்ணீரையும்,
                       "  நம்  தலைமுறையும்"
தள்ளி நின்றாவது "பார்க்கட்டுமே'
                       
                                      வன்-சித்திரலிங்கம்.