Pages

Sunday, July 24, 2011

ஜாதியை ஒழிக்க முடியுமா?

முடியும். ஏதோ எனக்கு தெரிந்த ஒரு வழி.

ஜாதியை ஒழிக்க முதலில் குறிப்பிட்ட ஜாதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் பாரபட்சங்கள் நிறுத்தப்பட வேண்டும். அதற்குப் பதிலாக பள்ளிகளில் சேர்க்கும் பொழுதோ அல்லது வேறு காரணத்திற்காக கேட்கப்படும் பொழுதோ ஜாதி என்ற இடத்தில் இல்லை என குறிப்பிடுபவர்க்ளுக்கு கனிசமான சலுகைகள் வழங்கலாம். ஆரம்பத்தில் இது சர்ச்சைக்குரியதாகவும், சிரமமாகவும் இருந்தாலும் நமக்கு பின்னால் வரும் இரண்டாம் தலைமுறையினருக்கு ஜாதி என்றால் என்னவென்றே தெரியாமல் போக வாய்ப்புள்ளது.

உங்களுக்கு தெரிந்த யோசனைகளையும் சொல்லுங்கள். ஜாதியை ஒழிப்பதில் உங்கள் பங்கும் இருக்கட்டும்.

Wednesday, July 20, 2011

கோவில் புனிதம் எப்போது கெட்டுபோனது ?



மனிதனுக்கு மட்டுமல்லாமல் கடவுளுக்கும்
ஜாதி மதம் என்று பிரித்த பொழுதே
கெட்டுவிட்டது கோவிலின் புனிதம்.
நல்லவர், கெட்டவர் என்றெல்லாம் பாராமல்
பணத்திற்காக பூஜித்த பொழுதே
கெட்டுவிட்டது கோவிலின் புனிதம்.
எல்லோருக்கும் பொதுவான இறைவனை காண
சிறப்பு தரிசனம் ஒதுக்கப்பட்ட
அன்று கெட்டுவிட்டது கோவிலின் புனிதம்.