Pages

▼

Sunday, July 24, 2011

ஜாதியை ஒழிக்க முடியுமா?

முடியும். ஏதோ எனக்கு தெரிந்த ஒரு வழி.

ஜாதியை ஒழிக்க முதலில் குறிப்பிட்ட ஜாதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் பாரபட்சங்கள் நிறுத்தப்பட வேண்டும். அதற்குப் பதிலாக பள்ளிகளில் சேர்க்கும் பொழுதோ அல்லது வேறு காரணத்திற்காக கேட்கப்படும் பொழுதோ ஜாதி என்ற இடத்தில் இல்லை என குறிப்பிடுபவர்க்ளுக்கு கனிசமான சலுகைகள் வழங்கலாம். ஆரம்பத்தில் இது சர்ச்சைக்குரியதாகவும், சிரமமாகவும் இருந்தாலும் நமக்கு பின்னால் வரும் இரண்டாம் தலைமுறையினருக்கு ஜாதி என்றால் என்னவென்றே தெரியாமல் போக வாய்ப்புள்ளது.

உங்களுக்கு தெரிந்த யோசனைகளையும் சொல்லுங்கள். ஜாதியை ஒழிப்பதில் உங்கள் பங்கும் இருக்கட்டும்.

Wednesday, July 20, 2011

கோவில் புனிதம் எப்போது கெட்டுபோனது ?



மனிதனுக்கு மட்டுமல்லாமல் கடவுளுக்கும்
ஜாதி மதம் என்று பிரித்த பொழுதே
கெட்டுவிட்டது கோவிலின் புனிதம்.
நல்லவர், கெட்டவர் என்றெல்லாம் பாராமல்
பணத்திற்காக பூஜித்த பொழுதே
கெட்டுவிட்டது கோவிலின் புனிதம்.
எல்லோருக்கும் பொதுவான இறைவனை காண
சிறப்பு தரிசனம் ஒதுக்கப்பட்ட
அன்று கெட்டுவிட்டது கோவிலின் புனிதம்.

Tuesday, May 31, 2011

குறட்டை ஒலி

இரவு முழுவதும்
உறங்காமல்
ரசித்துகொண்டிருந்தேன்
பக்கத்தில்
குறட்டை ஒலி

Sunday, May 22, 2011

உன் அழைப்பிற்காக....


ஆறு மணி நேர பிரிவு
என் அங்கத்தை
அறுத்துவிட்டது

செல் போன் ஒலிக்காக-என்
செவிகள் தீட்டப்பட்டன !
செல்போன் ஒளிக்காக-என்
கண்கள் அலை பாய்ந்தன!

உனது வேலை பளு எண்ணி
உன்னை அழைக்க நினைத்த
மனம் ஆசையை
அடக்கி வைத்தது
இருந்தும் ஒரு முறை
அழைத்தேன்
பதில் இல்லாமல்
பரிதவித்தேன்

மீண்டும் காத்திருக்கிறேன்
உன் அழைப்பிற்காக!......

Tuesday, May 17, 2011

பத்திரமாய் பார்த்துகொள்


பேச துடிக்கும் இதயம்
வர மறுக்கும் வார்த்தை
பொங்கி வரும் கண்ணீர்
என்
கவலையெல்லாம்
உன் மீது
என்
கவனமெல்லாம்
உன் மீது
பத்திரமாய் பார்த்துக்கொள்
உன்னையும்
உனக்குள் இருக்கும்
என்னையும் !